சென்னை உயர் நீதிமன்றம் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர கால வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம், மற்றும் மதுரைக் கிளை நீதிபதிகளின் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. மே 18-ம் தேதியிலிருந்து ஜூலை 7-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை கோடை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள், அமர்வுகள் மற்றும் விடுமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப்பட்ட விதிகளை உருவாக்க அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது என்பதை நாடாளுமன்ற நிலைக்குழு கவனத்தில் கொண்டுள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்ற விதிகள், கீழ் 1966 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 வாரங்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
இருப்பினும், உச்ச நீதிமன்ற விதிகள், படி 2013 முதல் கோடை விடுமுறையை ஆண்டுக்கு ஏழு வாரங்களாகக் குறைத்தது. அதன்படி, உச்ச நீதிமன்றம் ஒரு வருடத்தில் சராசரியாக 214 நாட்கள் இயங்குகிறது. அதேபோல, நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் ஒரு வருடத்தில் சராசரியாக 210 நாட்கள் வேலை நாட்களாக செயல்படுகிறது. தற்பொழுது நீதிமன்ற வேலை நாட்கள் ஒரு வருடத்தில் 222 நாட்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.