WWE சம்மர்ஸ்லாம் 2023, இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 6) காலை 5.30மணிக்கு தொடங்கப்பட்டது, இதில் மிகவும் எதிர்ப்பார்த்தது, பிராக் லெஸ்னர் VS கோடி ரோட்ஸ் இடையே நடக்கும் போட்டி ஆகும். முன்னதாக, கோடி ரோட்ஸ் பிராக் லெஸ்னரை பேக்லாஷ் 2023 இல் தோற்கடித்தார், அதே சமயம் பிராக் லெஸ்னர், நைட் ஆஃப் சாம்பியன்ஸ் 2023 இல் கோடி ரோட்ஸை தோற்கடித்தார். இதன் தொடர்ச்சியாக் மூன்றாவது முறை summerslam-ல் இவர்கள் மோதினர்.
தி அமெரிக்கன் நைட்மேர் என அழைக்கப்படும் கோடி ரோட்ஸ், மற்றும் தி பீஸ்ட் இன்கார்னேட் என அழைக்கப்படும் பிராக் லெஸ்னர் இடையேயான இந்த போட்டி ரசிகர்களை கவர்ந்தது. மாற்றி மாற்றி தாக்கி கொண்ட இருவரும் அரங்கையே அதிரவைத்தனர். சூப்லேக்ஸ் சிட்டிகளை அல்லி வீசினார் பிராக் லெஸ்னர். இறுதியில் கிமுரா லாக்கில் ரோட்ஸை, லெஸ்னர் மடக்கினார், வலியால் துடித்தார் ரோட்ஸ். பின்னர் ரோட்ஸ் லெஸ்னரை கிமுரா லாக்கில் அடைத்தார். இறுதியில் பிராக் லெஸ்னரை வீழ்த்தி கோடி ரோட்ஸ் வெற்றி பெற்றார்.
ஆட்டம் முடிந்த பிறகு, பிராக் லெஸ்னர் ரோட்ஸின் கைகளை குலுக்கி அவரை அணைத்துக்கொள்கிறார். அவர் ரோட்ஸின் கைகளை உயர்த்தி, கூட்டத்தில் மரியாதை கேட்கிறார். இந்த வெற்றியின் மூலம் பிராக் லெஸ்னர் VS கோடி ரோட்ஸின் கதை முடிவடைகிறது, அதுவும் கோடி ரோட்ஸ்க்கு சாதகமாக.