கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில்நுட்பத் துறையை செய்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் முழு அறிவிப்புக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2022-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் மீதமுள்ள விடுமுறை நேரமும் வழங்கப்படும் என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
இது தவிர, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆறு மாத சுகாதாரம், வேலை வாய்ப்பு சேவைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியேற்ற ஆதரவு ஆகியவையும் கிடைக்கும். அமெரிக்காவிற்கு வெளியே உள்ள தொழிலாளர்கள் உள்ளூர் நடைமுறைகளுக்கு ஏற்ப ஆதரிக்கப்படுவார்கள்.
இதுதொடர்பாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது, “பணி நீக்கத்தில் இடம்பெற்றுள்ள தொழில் நுட்ப ஊழியர்கள் அடுத்த வேலைவாய்ப்பைத் தேடும் வரையில் அவர்களுக்குப் போதுமான ஆதரவு அளிக்கும். அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களது 60 நாள் நோட்டீஸ் காலத்திற்கான முழு சம்பளமும் வழங்கப்படும். கூடுதலாக 16 வாரங்களுக்கான சம்பளத் தொகையும் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.