fbpx

Free treatment: சூப்பர் அறிவிப்பு!… இலவச சிகிச்சை உச்ச வரம்பு அதிகரிப்பு!… தமிழக அரசு அதிரடி!

Free treatment:விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ”இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின் . அதன்படி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்திற்கு இத்திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை உரிய நேரத்தில் காப்பாற்றுவதற்காக முதல்வர் அறிவித்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் கீழ் விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்ச வரம்பு தொகை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாம்.சிகிச்சை செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தின் கீழ் விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

English summary:Increase in free treatment ceiling

Readmore:https: https://1newsnation.com/garlic-price-good-news-for-housewives-garlic-price-has-drastically-reduced-worry-no-more/

Kokila

Next Post

Guava: தினமும் கொய்யா இலைகளை சாப்பிட்டால்.. இந்த நோய்கள் கண்டிப்பாக வராது.!?

Tue Feb 20 , 2024
Guava: பொதுவாக பழங்களில் கொய்யாப்பழம் மிகவும் சத்து வாய்ந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் பெற்றதாகவும் இருந்து வருகிறது. ஆனால் கொய்யா பழத்தை விட கொய்யா இலைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கொய்யா இலை உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பது முதல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பது வரை பல வகையான நோய்களை தீர்க்கிறது. கொய்யா இலையில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்கள் […]

You May Like