fbpx

குறுந்தாடி, வெள்ளை கலர் டீ-ஷர்ட்..! மாஸாக வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த்…!

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467. மேலும் முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கு 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டிருக்கூடிய ஆயிரம் விளக்கு சட்டமன்றத்தின் கீழ் வரக்கூடிய ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்குச்சக்காவடி மையம் வாக்குச்சக்காவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்தலுக்கும் இந்த வாக்குச்சாவடி மையத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் வாக்கினை பதிவு செய்வார்.

இன்னும் சற்று நேரத்தில் தனது இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு வாக்குச்சக்காவடி மையத்திற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் நசடிகர் ரஜினிகாந்த் வாக்கினை பதிவு செய்யும் அந்த வாக்குச்சக்காவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுத்தடிந்த்து சிக்கனில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், வாக்களிக்க காத்திருந்தோர் சற்றுநேரம் நிறுத்திவைக்கப்ட்டனர். பின்னர் உடனடியாக வாக்குச்சக்காவடி மையத்தில் இருக்கக்கூடிய ஊழியர்கள் உடனே அதைசரி செய்தனர். பின்னர் அந்த பழுது ஏற்பட்ட மின்னணு வாக்கு இயந்திரம் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பாட்டிற்கு வந்தது.

வாக்குச்சக்காவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த வாக்குச்சக்காவடியில் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அதன்பிறகு 8 மணியளவில், நடிகர் ரஜினி காந்த் ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். குறுந்தாடி, வெள்ளை கலர் டீ-ஷர்ட் என்று சுறுசுறுப்பாக வந்து வாக்களித்துவிட்டு சென்றார்.

Kathir

Next Post

யுபிஎஸ்சி டாப்பர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவின் போலி டெஸ்ட் பேப்பர் வைரல்!… நெட்டிசன்களிடையே சலசலப்பு!

Fri Apr 19 , 2024
UPSC 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த ஆதித்யா ஸ்ரீவஸ்தாவின் போலி டெஸ்ட் பேப்பர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2023ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உட்பட பல்வேறு பணிகளுக்கான குரூப் ஏ, குரூப் பி தேர்வுகள் முன்னதாக நடைபெற்று முடிந்த நிலையில், அதன் முடிவுகள் கடந்த 16ம் தேதி மத்திய (UPSC Civil Servies) அரசு பணிகள் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான நேர்காணல் […]

You May Like