தமிழ் பட நடிகைகள் சமீப காலங்களாக ஆன்மீக வழிபாட்டில் அதிகளவில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ரஜினியுடன் ‘காவலா’ பாடலுக்கு தமன்னா ஆடிய ஆட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தமன்னாவின் இந்த ஆட்டம் ‘பையா’ படத்தில் இருந்தே துவங்கியது. அப்போது, ‘பையா’ படத்தின் வெற்றிக்கும் தமன்னா போட்ட ஆட்டம் காரணமாக கூறப்பட்டது.
பின்னர் பாகுபலியின் பலமான திரைக்கதை அமைப்பிலும் தமன்னாவின் ஆட்டம் பெரிதும் ரசிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது இந்தியிலும் பிரபலமான ஹீரோயினாக வலம் வருகிறார் தமன்னா. கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு இவர், டான்ஸ் ஆடினால் அந்த படம் பெரிய ஹிட் ஆகிறது. படத்திற்கும் நல்ல வரவேற்பும், விளம்பரமும் கிடைக்கிறது என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் வழிபட்டதைத் தொடர்ந்து தமன்னா தற்போது பூரி ஜகந்நாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். காசிக்கு சென்றும் வழிபட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் வழிபட்ட பின் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவும் ஆன்மிகத்தில் அதிகளவில் ஈடுபடுகிறார். இவர், தொடர்ச்சியாக கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று யோகா செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
Read More : அடேங்கப்பா..!! 6 லட்சம் பேராம்..!! சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி..!!