ஃபெஞ்சல் புயல் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.30ஆம் தேதி) பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இன்று காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயலை காரணமாக சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், கோட்டை ரயில் நிலையம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை தொடர்பான தகவலுக்கு 044-25330952, 044-25330953 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Read More: ”அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு”..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!