fbpx

பெரும் பரபரப்பு…! ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேல் நடவடிக்கை…! அரசு அதிரடியாக பிறப்பித்த ஆணை…!

தமிழக அரசு உத்தரவு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியாகியன. அதில் 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று முன்பாகவே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர் சிவக்குமார் பரிந்துரையின் படி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டுள்ளார். போயஸ் கார்டனில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை தங்கிபிடித்த சசிகலாவும் பணியாளர்களும் தாமதிக்கமால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு கட்டுப்பாடற்ற நீரழிவு நோய், மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற உபாதைகள் இருந்துள்ளன. 2016 செப்டம்பர் 27 ஆம் தேதி காவிரி நதிநீக் கூட்டம் நடைபெற்ற் போது புகைப்படம் எடுக்க ஜெயலலிதா அனுமதித்த போதும் ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் அதனை தடுத்துள்ளார். அன்று இரவே ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது..

2016 அக்டோபார் 11 ஆம் தேதி அமெரிக்க மருத்துவர் ஸ்டூவார்ட் ரஸ்ஸலால் பரிந்துரைக்கப்பட்ட ஆஞ்சியோ ஜெயலலிதாவுக்கு செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது. ஆஞ்சியோகிராம் செய்வதற்கு அடிப்படைத் தேவையான ரத்தத்தில் கிரியேடினின் அளவு சரியாக இருந்தும் ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்ற காரணத்தை விளக்கவில்லை. ஆஞ்சியோவை ஒத்திவைக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீகே தொலைபேசியில் பரிந்துரைத்ததாகவும் மருத்துவர் பாபு ஆபிரகாம் முரண்பட்ட தகவலை ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 ஆம்தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித்தது. ஆனால் அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50க்குள் இருக்கும்.. வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்.‌ மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும்.

அப்போதய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பாதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்.. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்.. என ஆணையத்தின் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்

ஆறுமுகசாமி விசாரணை ஆணைய பரிந்துரையின் படி மேல் நடவடிக்கை . தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Vignesh

Next Post

சோகமான சம்பவம்...! ஹெலிகாப்டர்‌ விபத்து... 3 பேர் உயிரிழப்பு...! முதலமைச்சர் இரங்கல்...!

Wed Oct 19 , 2022
உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்‌ ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ மற்றும்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை கொண்டுவர நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்தில்‌ நிகழ்ந்த ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ 7 பேர்கள்‌ உயிரிழந்தனர்‌. இதில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த திருமதி. கலா ரமேஷ்‌, பிரேம்குமார்‌ வாஞ்சிநாதன், சுஜாதாபிரேம்குமார்‌ ஆகிய மூவரும்‌ கேதார்நாத்‌, பத்ரிநாத்‌ ஆகிய இடங்களுக்கு புனிதயாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர்‌ […]
முதல்வருக்கு உடல்நலக்குறைவு..! அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..! மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்..!

You May Like