மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000/- பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டு வடம், பார்க்கின்சன் மற்றும் நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் அரசு அலுவலக வேலை நாட்களில் சமர்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.1000 உதவித்தொகை, 6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000, 9 முதல் 12 வகுப்பு வரை ரூ.4000, இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு, ரூ.6000, முதுகலை பட்டம் ரூ.7000 வழங்கப்படும்.