fbpx

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்.! கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்த தமிழக அரசு.! கடைசி தேதி எப்போது.?

தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ரீஜனல் ரிசோர்ஸ் ட்ரெயினர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி செய்தியாக நவம்பர் 30ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க டிசம்பர் 7ஆம் தேதி 5 மணி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது.

தமிழக அரசு கொடுத்திருக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு அரசு. இதன்படி விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 13ஆம் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருக்கிறது. மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்வதற்கும் டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதாக அறிவித்துள்ளது.

Next Post

பல 100 கோடி டாலர்களில் ப்ராஃபிட்.! இந்த டாப் பிராண்டுகளின் முதல் பிஸ்னஸ் என்ன தெரியுமா.?

Thu Dec 7 , 2023
இன்று உலகில் மிகப்பெரிய கம்பெனிகளாக இருக்கும் பல நிறுவனங்கள் ஆரம்பத்தில் மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்திருக்கிறது. மேலும் அவை தங்களது நிறுவனங்களின் தொடக்கத்தில் தற்போது தயாரிக்கும் பொருட்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பொருட்களையே தயாரித்திருக்கின்றன. இன்று உலகில் பல நூறு கோடி டாலர்கள் வருமானத்தை ஈட்டும் கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தின் தொடக்கத்தில் எந்தப் பொருட்களை தயாரித்தன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். செல்போன் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய […]

You May Like