நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..
காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.. இந்த அறிவிப்பால் டெல்டா பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.. அப்போது “ இந்த நிலக்கரி சுரங்க அறிவிப்பு வந்த உடன் முதலமைச்சர் விரைவாக செயல்பட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.. அதே போல் எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு இது போன்ற திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலினும் கூறியிருந்தார்….
இந்நிலையில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.. எனது கோரிக்கையை ஏற்று இந்த ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகளை நீக்கியதற்கு பிரதமர் மோடி மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோருக்கு நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார்..