fbpx

Tasmac | மதுப்பிரியர்கள் ஷாக்..!! தமிழ்நாட்டில் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!!

இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதியை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பறக்கும் படை அதிகாரிகளும் பல்வேறு இடங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு நடக்கும் தினத்திலும், அதற்கு முந்தயை தினத்திலும் அசம்பாவிதங்களை தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More : ”இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது”..!! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு மனு..!!

Chella

Next Post

BREAKING | தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு..!! ஏப்.1 முதல் அமல்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!!

Sat Mar 23 , 2024
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், விழுப்புரம் – தென்னமாதேவி, திருவண்ணாமலை – இனம்காரியாந்தல் ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More […]

You May Like