தமிழ்நாட்டில் நாளை மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை செப்.28ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபியை முன்னிட்டு நாளை செப்.28 வியாழக்கிழமை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் படி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், எப்.எல்.-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.-3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) மற்றும் எப்.எல்.11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.