fbpx

புளி இல்லாம ரசமா.? அட ஆமாங்க.! சுவையான கொங்கு நாட்டு செலவு ரசம் செய்வது எப்படி.!

புளி மற்றும் தக்காளி இல்லாமல் கொங்கு நாட்டு சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ரசம் கேள்விப்பட்டிருக்கீங்களா.? அதுதான் செலவு ரசம். வாங்க இந்த செலவு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இது செய்வதற்கு சீரகம், குறுமிளகு, வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கடுகு, தேங்காய் எண்ணெய், மல்லி பொடி, மஞ்சள் பொடி, பூண்டு மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பூண்டு, வர மிளகாய் மற்றும் மல்லி பொடி சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

பின்னர் இந்தக் கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளவும். இப்போது சின்ன வெங்காயத்தை நன்றாக தட்டி மசித்து கொள்ளவும். அதே கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை மற்றும் கடுகு போட்டு லேசாக வதக்கிய பின்னர் நான் மிக்ஸியில் அரைத்த கலவையை இதில் சேர்த்து நன்றாக வதக்கவும். இவற்றுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். லேசாக கொதித்ததும் தேவையான அளவு உப்பு போட்டு நமது தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த ரசம் கட்டியாக இருக்கக் கூடாது அப்போதுதான் இதன் சுவை நன்றாக இருக்கும். லேசாக சூடு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான செலவு ரசம் ரெடி.

Next Post

தலை முடி உதிர்கிறதா.? கருமையான கூந்தலை பெற சூப்பரான ஹேர் டானிக்.!

Fri Dec 8 , 2023
நம் அழகில் தலைமுடியின் பங்கு முக்கியமானது. என்னதான் முக அழகு மற்றும் உடல்வாகு இருந்தாலும் தலையில் முடி அடர்த்தியாக இல்லை என்றால் அழகு குறைந்ததாகவே தோன்றும். எனவே நமது கூந்தல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இதற்காக பியூட்டி பார்லர் மற்றும் சலூன் என செலவு செய்தும் பலன் அளிக்கவில்லையா.? வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த கை வைத்திய முறையை பின்பற்றி பாருங்கள். ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். இந்த […]

You May Like