fbpx

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ நடிகரை திருமணம் செய்யும் டாடா பட நடிகை!

டாடா பட நடிகை அபர்ணா தாஸ்-க்கு விரைவில் திருமணம் ஆக இருப்பதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் பகத் பாசிலின் நடிப்பில் வெளியான Njan Prakashan என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபர்ணா தாஸ். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் அபார்ணா தாஸ், நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். படத்தில் கவின், பாக்யராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த தீபக் பரம்போல் என்பவருக்கும், நடிகை அபர்ணா தாஸ்-க்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று மஞ்சும்மல் பாய்ஸ்.

Next Post

ஒரே ஊசி..!! 10 நிமிடத்தில் முதியவர் பலி..!! சென்னையில் சிக்கிய போலி டாக்டர்..!! பெரும் பரபரப்பு..!!

Wed Apr 3 , 2024
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜேந்திரன் என்ற முதியவர், இந்த மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவருக்கு பெருமாள் ஆங்கில மருத்துவமான ஊசி போட்டுள்ளார். இந்நிலையில், ஊசி போட்ட 10 நிமிடங்களில் ராஜேந்திரன் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ […]

You May Like