டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது..
ஸ்பைஸ்ஜெட்டின் SG-11 என்ற விமானம் இன்று டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.. ஆனால் செல்லும் வழியிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து , அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..
எனினும் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது இது முதன்முறையல்ல.. கடந்த 1 மாதத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது 3-வது முறையாகும். ஜூன் 19 அன்று, 185 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் டெல்லி நோக்கிச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. இதே போல் கடந்த 2-ம் தேதி நடுவானில் பறந்தபோது கேபினில் இருந்து புகை வந்ததால் ஜபல்பூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது..