fbpx

பயங்கரம்!. 10 மாடி கொண்ட ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதால் அச்சம்!

Hotel collapse: அர்ஜென்டினாவில் 10 மாடிகள் கொண்ட ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள பியூனஸ் அயர்ஸிலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் வில்லா கெசெல்லில் டுப்ரோவ்னிக் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒருவர் பலியானார். உயிரிழந்தவர் 80 வயது முதியவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அவசர உதவியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

1986ல் திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. முறையான அனுமதி இல்லாததால், ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன” என்றும் நகராட்சி விதிமுறைகளுக்கு இணங்காமல், இரகசியமாக கட்டுமான தொழிலாளர்கல் பணிபுரிந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Readmore: மக்களே அலர்ட்!. இந்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?. வானிலை மையம் அப்டேட்!

English Summary

Terrible! A 10-storey hotel collapses in an accident! One victim! Fear because many people are trapped under the rubble!

Kokila

Next Post

அட்டகாசம்...! 20% தீபாவளி போனஸ் இவர்களுக்கும் வழங்கப்படும்...! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Wed Oct 30 , 2024
20% Diwali bonus will also be given to them.

You May Like