டெல்லி மாநிலத்தில் உள்ள ஐஐடியில் மாணவர்களின் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த டெல்லி பாரதி கல்லூரி மாணவிகள் கழிவறையில் உடை மாற்றும் போது, ரகசியமாக படம் எடுக்கப்பட்டதாக 10 மாணவிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
பாரதி கல்லூரியின் எலான்ட்ரே சொசைட்டியைச் சேர்ந்த பெண்கள், சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்ட வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது புகார் அளித்த பிறகும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக கிஷன்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட 20 வயது ஒப்பந்த துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.