Maha Kumbh Crowd: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், மௌனி அமாவாசையையொட்டி ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக ‘மகா கும்பமேளா’ விளங்குகிறது. பக்தர்களின் கூற்றுப்படி, கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில், மௌனி அமாவாசையான இன்று, மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நீராட சங்கமத்தில் கூடுவார்கள், மேலும் இந்த நாளில் சுமார் 10 கோடி மக்கள் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த நாளில் கங்கையில் நீராட வரும் பக்தர்களின் பெரும் எண்ணிக்கை சங்கமத்தில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
Readmore: குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக்கூடாது!. உச்சநீதிமன்றம்!