fbpx

டெஸ்ட் கிரிக்கெட்..!! வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிரணி..!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிரணி வரலாற்று வெற்றி படைத்துள்ளது.

நவி மும்பையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்ஸ் 428 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, நிலையில்லாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து இங்கிலாந்து 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2-வது இன்னிங்ஸில் இந்தியா 186/6-க்கு டிக்ளேர் செய்ய இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது.

டி20-யில் 2-1 என இங்கிலாந்து வெற்றி பெற, ஒரே டெஸ்ட் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை பெற்று இந்திய மகளிரணி கோப்பையை வென்றுள்ளது. முதல் இனிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 4 என மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய தீப்தி சர்மா ஆட்ட நாயகி விருது பெற்றார்.

Chella

Next Post

இனிமேல் தும்மல் வந்தால் அடக்காதீர்கள்!… மூச்சுக்குழாயில் ஏற்படும் விபரீதம்!

Sat Dec 16 , 2023
தும்மலை அடக்க முயன்ற நபரின் மூச்சுக் குழாயில் துளை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் ஓட்டிச் சென்ற நபருக்கு திடீரென சளி ஏற்பட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், தும்மல் ஏற்பட்ட போது அந்த நபர் மூக்கை அழுத்தி வாயை மூடியுள்ளார். இந்த விசித்திரமான தும்மல் கட்டுப்பாட்டு நுட்பம் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியது. அடக்கப்பட்ட தும்மலின் விசை அவரது சுவாசக் குழாயில் 2/2 மில்லிமீட்டர் அளவில் துளையை […]

You May Like