கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது.
இதன் காரணமாக தளவாய் சுந்தரம் அவர்கள், தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளார். சமீபத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! ரயில்வேயில் கொட்டிக் கிடக்கிறது காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு..?