fbpx

2024 ஆம் வருடம் வானில் நிகழ இருக்கும் அதிசயங்கள்.! வானியல் ஆய்வு மையம் வெளியிட்ட அபூர்வ தகவல்.!

வர இருக்கின்ற புத்தாண்டை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த ஆண்டில் விண்வெளியில் பல அரிய நிகழ்வுகள் நடக்க இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. வருகின்ற 2024 ஆம் ஆண்டில் கிரகணங்கள் முதல் பௌர்ணமி மற்றும் விண்கற்கள் பொழிவது போன்ற பல அதிசய காட்சிகள் விண்வெளியில் நடந்தேறும் எனவும் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தகவல் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் 2024 ஆம் ஆண்டில் விண்வெளி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைகிறது. இந்த வருடத்தில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் மேலும் விண்கற்கள் வான் பரப்பில் பொழியும் நிகழ்வு ஆகியவையும் நடைபெற இருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது. மேலும் 2024 ஆம் ஆண்டில் மக்கள் பார்க்க வேண்டிய வானியல் நிகழ்வுகளை நாசா பட்டியலிட்டு இருக்கிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டில் 12 விண்கல் மழை வான் விழியில் நிகழ இருக்கிறது.

வருகின்ற வருடத்தின் தொடக்கத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை 12 முறை விண்கற்கள் மழை பொழிவு பூமியின் வளிமண்டலத்தில் நிகழ இருக்கிறது. இந்த நிகழ்வானது ஜனவரி, ஏப்ரல், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வானில் நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் சந்திர கிரகணம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வட அமெரிக்காவில் நிகழ இருக்கிறது. ஏப்ரல் எட்டாம் தேதி முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவில் நிகழும். இந்த சூரிய கிரகணம் விடிய காலை தொடங்கி மாலை வரை தொடரும். இந்த கிரகணமானது அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் தொடங்கி மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வரை தெரியும் என நாசா அறிவித்துள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த அறிய நிகழ்வும் வட அமெரிக்க பகுதிகளில் மட்டுமே காண கிடைக்கும் என நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் நிகழும் பௌர்ணமி மற்றும் முழு நிலவு வெவ்வேறு பெயர்களால் வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஜனவரி மாதம் நிகழும் பௌர்ணமியை உல்ஃப் மூன் என்று அழைப்பார்கள். மேலும் பிப்ரவரி மாதம் வரைய இருக்கும் பௌர்ணமி பனி நிலவு என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று வருகின்ற வருடம் 11 முறை பௌர்ணமி அல்லது முழு நிலவை வானில் காணலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு ஜனவரி மாதம் 25ஆம் தேதி, பிப்ரவரி மாதத்தில் 24 ஆம் தேதியும், மார்ச் மாதத்தில் 25 ஆம் தேதியும், ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி மற்றும் மே மாதம் 23ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதே போல ஜூன் மாதம் 21 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 17ஆம் தேதியும் முழு நிலவை வானில் காணலாம். ஆண்டின் இறுதி மாதங்கள் ஆன நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 15 ஆம் தேதி முழு நிலவு காணக் கிடைக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Post

போன் பேச தொந்தரவு.! கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட 2 வயது குழந்தை.! பதற வைக்கும் சம்பவம்.!

Sun Dec 31 , 2023
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போன் பேசுவதற்கு இடையூறாக இருந்ததால் இரண்டு வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாயை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடித் பகுதியைச் சேர்ந்தவர் அப்சானா ஹாத்துன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தது. இந்நிலையில் இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனைத் […]

You May Like