fbpx

நடு ராத்திரியில் கள்ளக்காதலியின் வீட்டிற்குள் புகுந்த பஸ் டிரைவர்..!! கதவை உடைத்து சரமாரியாக தாக்கிய கும்பல்..!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே திருவாணிக்காவு பகுதியை சேர்ந்தவர் முகம்மது சஹர் (32). இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணுடன் முகம்மதுவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண்ணின் வீட்டுக்கு நள்ளிரவில் முகம்மது சஹர் சென்றுள்ளார். இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த 8 பேர் கும்பல், இளம்பெண்ணின் வீட்டு கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்பட்டதும், முகம்மது சஹரை வெளியே இழுத்து போட்டு அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

இதில் முகம்மது சஹர் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி முகம்மது சஹர் உயிரிழந்தார். இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! விமானக் கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..?

Wed Mar 8 , 2023
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால், வெவ்வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விழாவை கொண்டாடி வருகின்றனர். அவற்றில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஹோலி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. மும்பை – கோவா கட்டணத்தில் 33%, புனே – டெல்லி 23%, டெல்லி-பெங்களூரு மற்றும் லக்னோ இடையே 20%, டெல்லி-ராஞ்சி வழித்தடத்தில் 13% கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கோடை […]

You May Like