சுங்கக் கட்டணத்தை வருடந்தோறும் உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து வருகின்ற 01.04.2023 அன்று, காலை 11.00 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நீண்ட காலமாக அதிக அளவிலான அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுங்கச்சாவடிகளில் வருமானம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
