fbpx

குட் நியூஸ்… TET தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு பயற்சி வழங்கப்படும்…! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு…!

TET தேர்வு கம்ப்யூட்டர் மூலம் எழுதுவதற்கான பயிற்சி மேற்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26 -ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை இடைநிலை ஆசிரியருக்கான தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கு 15 நாள்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.பயிற்சி மேற்கொள்வது குறித்த அறிவிப்பு மற்றும் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Also Read: “சூப்பர் நியூஸ்” மாணவர்களுக்கு வாரம் தோரும் சனிக்கிழமை மாலை 4 முதல்‌ 6 மணி வரை வகுப்பு…! ஆட்சியர் அறிவிப்பு

Vignesh

Next Post

உஷார்..; அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... மீண்டும் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்...! மக்கள் இதை அவசியம் கடைபிடிக்க வேண்டும்....!

Thu Jul 7 , 2022
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து முதன்மை சென்னை மாநகராட்சி ஆணையாளர் சார்பில் திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, அதில், பொதுமக்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதையும், முகக்கவசம் […]
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாகிறது..! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை அவசர கடிதம்..!

You May Like