மழைக்காலத்தில் கொசுக்களால் அதிக ஆபத்து உள்ளது. இது ஒரு சிறிய உயிரினம் என்றாலும், டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா போன்ற கடுமையான நோய்களை பரப்புகின்றன. பெரும்பாலான மக்கள் கொசு கடியில் இருந்து தப்பவும், இந்த நோய்களின் பரவலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கொசு விரட்டிகளை நம்பியுள்ளனர். இந்த கொசு விரட்டிகள் பாதுகாப்பானதா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த மார்ச் மாதம் டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் கொசுவத்தி புகையால் மூச்சு திண்றல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அதே போல் கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை மாதவரத்தில் வசித்து வந்த மூன்று குழந்தைகள் கொசுவத்தி புகையால் மூச்சு திண்றல் ஏற்பட்டு உயிரிழந்தனர். எதனால் இப்படி நடக்கிறது என்று மக்கள் இடையே கேள்விகள் நிலவிவருகிறது.
இப்போது தமிழகத்தில் ஆங்கேங்கே கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது. சுற்றிலும் நீர் தேங்கியுள்ளதால், கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில், கொசுவர்த்தி, கொசு சுருள், கொசு அட்டை போன்ற பல கொசு விரட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சமீப காலமாக நிகழும் மரணங்கள் காரணமாக மக்கள் இதனை வாங்க பயம் கொள்கிறார்கள். இதனால் கொசு விரட்டி க்ரீம் சிறந்த தேர்வாக இருக்கும் என மக்கள் நம்புகின்றனர். ஆனால், கொசு விரட்டி க்ரீம் தோளில் பயன்படுத்தினால் புற்றுநோய் கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கொசு விரட்டி க்ரீம் பாதிப்புகள் :
தோல் தடிப்புகள் : கொசு விரட்டும் க்ரீம்களை அதிகமாகப் பயன்படுத்தினால் தோல் வெடிப்பு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள், கொசுக்களுக்கான கிரீம்களை தினமும் தடவினால் அரிப்பு ஏற்படலாம், இது தோலில் காயங்கள் ஏற்படவும் வழிவகுக்கும். மேலும், பல்வேறு வகையான ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம்,
எரியும் உணர்வு : உங்கள் உதடுகள் அல்லது கண்களைச் சுற்றி கொசு விரட்டியைப் பயன்படுத்தினால், அது எரிச்சலை ஏற்படுத்தலாம்.
உணவு விஷம் : குழந்தைகளுக்கு கொசு விரட்டி க்ரீம்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் தவறுதலாக அதை வாயில் வைத்தால் கூட, கொசு விரட்டும் கிரீம் குமட்டல் மற்றும் வாந்தி அல்லது கொடிய உணவு நச்சுக்கு வழிவகுக்கும்.
இயற்கை வைத்தியம்
ஐஸ் மசாஜ் : ஒரு மெல்லிய துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து வலி அல்லது வீக்கம் உள்ள இடத்தில் குறைந்தது 10-15 நிமிடங்களுக்குப் மெதுவாக மசாஜ் செய்யலாம். ஏனெனில் இது வீக்கத்தைக் குறைக்கவும் அரிப்புகளைத் தணிக்கவும் உதவும்.
கற்றாழை ஜெல் : அழற்சி மற்றும் அரிப்புகளை குறைக்கும் இயற்கையான பொருட்கள் கற்றாழையில் நிறைந்துள்ளது. எனவே, தோல் எரிச்சல் ஏற்பட்டால், கற்றாழை ஜெல்லை தடவலாம்.
கலமைன் லோஷன் : கேலமைன் லோஷன் அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது, எனவே பாதிக்கப்பட்ட பகுதியில் மெல்லிய அடுக்கைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து உலர அனுமதிக்கவும். உங்கள் தோல் வகையைப் பொறுத்து இந்த பக்கவிளைவுகள் மாறுபடலாம். எனவே, பாதுகாப்பாக இருக்க, உங்கள் உடல் முழுவதும் பயன்படுத்துவதற்கு முன்பு தோலின் ஒரு சிறிய பகுதியில் முதலில் க்ரீம்களை போட்டு சோதனை செய்யவும்.
Read more ; பயங்கரம்.. கேஷ் ஆன் டெலிவரியில் ஐபோன் ஆர்டர்.. போனிற்காக டெலிவரி பாயை கொலை செய்த கும்பல்..!! – பின்னணி என்ன?