fbpx

இந்தியா – கனடா உறவில் வலுக்கும் மோதல்!… மஹிந்திரா – Resson Aerosace நிறுவனம் இடையே கூட்டணி ஒப்பந்தம் முறிவு!

இந்தியா – கனடா உறவில் மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில், கனடா நிறுவனமான Resson Aerosace நிறுவனம் மஹிந்திரா உடன் தனது கூட்டணி மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளது.

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் படுகொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்கமாக குற்றம் சாட்டியது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது. இரு நாடுகளும் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கனடா – இந்தியா பிரச்சனைக்கு மத்தியில் Resson Aerosace நிறுவனம் மஹிந்திரா உடன் தனது கூட்டணியை முறித்துக்கொள்ளவும், முதலீட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கனடா நாட்டின் ஐடி சேவை நிறுவனமான Resson Aerosace-ல் 2018 ஆம் ஆண்டு 10 சதவீத பங்குகளை 6.63 மில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கியது. இந்தநிலையில், Resson Aerosace தானாக முன்வந்து கூட்டணி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக நேற்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வைத்திருந்த கிளாஸ் சி Resson நிறுவனத்தின் 11.18 சதவீத பங்குகள் பெறப்பட்டு பணமாக செட்டில் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கூட்டணி முறிவின் மூலம் Resson Aerosace நிறுவனம் 11.18 சதவீத பங்குகளுக்கு 4.7 மில்லியன் கனடா டாலர்கள் பணத்தை அனுப்பியுள்ளது, இது கிட்டத்தட்ட 28.7 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

லாக்கர் ஒப்பந்தங்கள்..!! எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை..!! செப்.30 தான் கடைசி..!!

Fri Sep 22 , 2023
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் திருத்தப்பட்ட வங்கி லாக்கர் விதிகளுக்கு இணங்குவதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியது. புதிய வங்கி லாக்கர் விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்ட பிறகு, அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற சூழலில், புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. ஜனவரி 1, 2023 முதல் புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்கள் உடனான […]

You May Like