தமிழக அரசு அறிவித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 18 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை ஜூன் 30-ம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இதற்கான காலக்கெடு ஜூலை 10-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. பலர் இதற்கான விண்ணப்பங்களை இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் விண்ணப்பிக்க கால அவகாசத்தை வருகின்ற 18ஆம் தேதி வரை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 2021-22 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவியர்களும் https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்வியில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில் இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவியர்கள் பதிவு செய்யலாம்.
மேலும் இது குறித்து கூடுதல் விபரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். இந்நிலையில் இதற்கு விண்ணப்பம் செய்யாத மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீடிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளியில் படித்த விவரங்கள், ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.