fbpx

தமிழக அரசு அறிவித்த மாதம் தோரும் ரூ.1,000 உதவித்தொகை…! இன்று மாலைக்குள் இதை செய்யவில்லை என்றால் கிடையாது…!

தமிழக அரசு அறிவித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் நிறைவடைகிறது.

இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை ஜூன் 30-ம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இதற்கான காலக்கெடு ஜூலை 10-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. 2021-22 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவியர்களும் https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்வியில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில் இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவியர்கள் பதிவு செய்யலாம்.

மேலும் இது குறித்து கூடுதல் விபரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்காத மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீடிக்கப்படாது என்பதை மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளியில் படித்த விவரங்கள், ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Also Read: கவனம்.. 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இனி இது கிடையாது…! அனைத்தையும் ரத்து செய்து அரசு திடீர் உத்தரவு…!

Vignesh

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு... மீண்டும் "மெகா தடுப்பூசி முகாம்‌" இன்று காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டுமே...!

Sun Jul 10 , 2022
தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. 6-ம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில்‌ 12 வயதுக்கு மேல்‌ முதல்‌ தவணை 1,14,087 பயனாளிகளுக்கும்‌. இரண்டாம்‌ தவணை […]

You May Like