திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தில் நடைபெறும் கருட சேவையை முன்னிட்டு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான கருட சேவை, அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. கருட சேவை தினத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை புரிவதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து வசதிகளிலும் வாகனங்களை அனுமதிப்பதிலும் தேவஸ்தானம் மாற்றங்களை அறிவித்துள்ளது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் திருப்பதி தேவஸ்தானத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கருட சேவை நடைபெறும் அக்டோபர் 7-ம் தேதி இரவு 9 மணி முதல் அக்டோபர் 9-ம் தேதி காலை 6 மணி வரை திருமலை திருப்பதிக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தேவஸ்தானம் கோரிக்கை வைத்துள்ளது.
Read more ; ’அடல் பென்ஷன் யோஜனா’ திட்டம் பற்றி தெரியுமா..? ரூ.210 முதலீடு செய்தால் போதும்..!!