fbpx

“செம வாய்ப்பு” தமிழக அரசு சார்பில் சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் நடைபெறும்…! ஆட்சியர் அறிவிப்பு

சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்கழகம்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ கடன்‌ திட்டங்களான தனிநபர்‌ கடன்‌, சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில்‌ கடன்‌, கைவினை கலைஞர்களுக்கு கடன்‌, கல்வி கடன்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்படுகிறது. திட்டம்‌ 1-ன்‌ கீழ்‌ பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம்‌ நகர்ப்புறமாயின்‌ ரூ.1,20,000-க்கு மிகாமலும்‌, கிராமப்புறமாயின்‌ ரூ.98,000 க்கு மிகாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. திட்டம்‌ 2-ன்‌ கீழ்‌ பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.8,00,000 க்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

கடன் விவரம்;

திட்டம்‌ 1-ன்‌ கீழ்‌ தனிநபர்‌ கடன்‌ ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும்‌ அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 மும்‌, திட்டம்‌ 2-ன்‌ கீழ்‌ ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும்‌ அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன்‌ வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 59% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில்‌ அதிக பட்ச கடனாக ரூ.10,00,000 வரை கடன்‌ வழங்கப்படுகிறது.

சுயஉதவிக்‌ குழு கடன்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்க்கு 7% வட்டி விகிதத்தில்‌ கடன்‌ வழங்கப்படுகிறது.

திட்டம்‌ 2-ன்‌ கீழ்‌ ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ.1,50,000 வரை கடன்‌ வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவ, மாணவிகள்‌ அரசால்‌ அங்கீரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்‌ இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்‌ கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்டசமாக திட்டம்‌ 1-ன்‌ கீழ்‌ ரூ.20,00,000 வரையில்‌ 3% வட்டி விகிதத்திலும்‌, திட்டம்‌ 2-ன்‌ கீழ்‌ மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும்‌ ரூ.30,00,000 வரையிலும்‌ கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில்‌ வசிக்கும்‌ (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய , புத்த பாரசீக மற்றும்‌ ஜெயின்‌) ஆகிய சிறுபான்மையினர்‌ இனத்தவர்களுக்கு டாம்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களான தனி நபர்‌ கடன்‌ திட்டம்‌ மற்றும்‌ சுய உதவிக்‌ குழுக்களான சிறு தொழில்‌ கடன்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்களுக்கான கடன்‌ வழங்கும்‌ சிறப்பு முகாம்‌ நாளை முதல் தருமபரி மாவட்டத்தில்‌ நடைபெற உள்ளது. சிறுபான்மையினர்‌ கடன்‌ விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்‌ சமர்ப்பித்து பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Also Read: இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மழைக்காலக் கூட்டத் தொடர்…! மொத்தம் 18 அமர்வு… 32 சட்ட முன்மொழிவுகள் எடுக்கப்படும்…!

Vignesh

Next Post

அடுத்த அதிரடி..! இனி வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பரில் வழங்க தடை...! மீறினால் நடவடிக்கை

Tue Jul 19 , 2022
தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பரில் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தித்தாளில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது, ஏனெனில் அதன் மையில் பல பயோஆக்டிவ் பொருட்கள் இருப்பதால், எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களில் உணவை வைத்து சாப்பிடுவது என்பது ஆரோக்கியமற்ற பழக்கம். உணவு […]

You May Like