fbpx

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி…! அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அத்தனை சிலைகளும் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். அதன்படி செப்டம்பர் 22,23,24 3 நாட்களும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதே போல சேலம் மாவட்டத்தில் மீலாது நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்டுள்ள உத்தரவில்; மீலாது நபி தினமான 28.09.2023 வியாழக்கிழமை அன்றும், காந்தி ஜெயந்தி தினமான 02.10.2023 திங்கட்கிழமை அன்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.

அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேற்காணும் நாட்களில் இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

செக்...! மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகே 33% இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும்...!

Fri Sep 22 , 2023
மக்களவையில் 2 உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த மகளிர் 33 % இடஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது. மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு பிறகு, உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக […]

You May Like