fbpx

’நிர்வாகம் செய்ய தெரியாமல் மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசு’..! ஜெயக்குமார் கடும் தாக்கு

தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணையில் இன்று அவர் ஆஜரானார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனது கைதின் போது உடைமாற்ற அனுமதிக்கவில்லை. நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். மருந்து மாத்திரைகள் எடுக்கவும்கூட அனுமதிக்கவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதிகள் இல்லாத பூந்தமல்லி சிறையில் கொசுக்கடிக்கு இடையில் அடைத்தனர். இரண்டு நாட்கள் அங்கேயே வைத்தனர். இப்படி பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கே பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றது. எனவே, இதுதொடர்பாக 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்ததாக கூறினார்.

’நிர்வாகம் செய்ய தெரியாமல் மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசு’..! ஜெயக்குமார் கடும் தாக்கு

மேலும், “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தெரிவித்தது. அதற்காக நாங்கள் பயப்படவில்லை. கட்டணத்தையும் உயர்த்தவில்லை. மாறாக நாங்கள் சலுகையை அறிவித்தோம்”. ஆனால், ’மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்’ என தெரிவித்த ஸ்டாலின், தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். மின்சார கட்டணம் உயர்வால் பொதுமக்கள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். பொருளாதார வல்லுனர்கள் குழு அமைத்துள்ளோம் என சொல்கிறார்கள். அந்தக் குழு அமைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அவர்கள் மக்கள் வாழ்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்? அரசு கஜானாவை நிரப்ப அவர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்கள்? நிர்வாகம் செய்ய தெரியாமல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டு மத்திய அரசு மேல் பழி சுமத்தி வருகின்றனர்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

பெரியார் பல்கலை. தேர்வு வினாத்தாளில் மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி..!!

Tue Jul 19 , 2022
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேட்கப்பட்ட கேள்வியின் சர்ச்சை அடங்குவதற்குள், மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில், முதுநிலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில், சாதி தொடர்பான கேள்வி கேட்கப்பட்ட […]
பெரியார் பல்கலை. தேர்வு வினாத்தாளில் மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி..!

You May Like