மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரி முதலாவது தெருவை சேர்ந்த அஜித் இவர் வாடகை வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் இருந்து பலத்தசத்தத்தோடு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு இருக்கிறது. ஆகவே அருகே உள்ள வீட்டில் இருப்பவர்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியேறினர்.
அப்போது அஜித்தின் வீட்டிலிருந்து குகை வந்திருக்கிறது இதன் காரணமாக, அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கம்ப இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது திடீரென்று மர்ம பொருள் என்றும் வெடித்து அங்கு வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிய நிலையில், கிடந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து, அருகில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அஜித்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 2 நாட்களாக வீட்டில் இல்லை என்றும் வெளியூர் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். ஆகவே காவல்துறையினர் அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு அழைத்துள்ளனர்.ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.
இந்த நிலையில் தான் வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதாவது வெடிக்கும் பொருளா என்கிற விதத்தில் கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டி விபத்து குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்தின் சோதனையையும், விசாரணையையும் தீவிர படுத்தியிருக்கிறார்கள்