தமிழ்நாடு நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ” உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கின்றனர்.. இவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு.. தமிழ்நாட்டில் கி.மு 6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக இருந்தது என்பதற்கு கீழடி தான் ஆதாரம்.. தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது.. உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்கு தான்.. இதை பல வரலாற்று ஆய்வுகள் மூலம் சொல்கிறோம்.. வரலாற்று பெருமை கொண்டு வாழ்ந்த தமிழினத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் இல்லை.. அந்த அவமான துடைக்கப்பட்ட நாள் தான் இன்று..
தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கே பல பத்தாண்டு காலம் போராட வேண்டி இருந்தது.. திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட முடிந்தது.. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தது திமுகவின் சாதனை… தமிழ், தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம் தான்.. தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல.. ரத்தமும் சதையும் கொண்ட உரிமைப் போராட்டம்.. சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை கொடுத்து வருகிறோம்…
இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.. திமுக ஆட்சியில் தான் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடித்தந்துள்ளோம்.. இந்தியாவின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாடின் பங்கு 6%.. “ என பெருமிதம் தெரிவித்தார்..