fbpx

தாய் வீட்டிற்கு சென்ற சிறுமி குழந்தைக்கு தாயானதால் அதிர்ச்சி..!! அண்ணன் செய்த மோசமான காரியம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 51 வயது கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 24 வயதில் மகள், 22 வயதில் மகன், 19 வயதில் மகன், 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றனர். இதில் கடைசி மகள் மட்டும் பொள்ளாச்சியில் தந்தை பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். மற்ற மூவரும் புதுக்கோட்டையில் தாயுடன் வசித்து வந்துள்ளனர்.

தந்தையுடன் வசித்து வந்த சிறுமி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து, சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலம் சரியில்லாததால் சிறுமி புதுக்கோட்டையில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தங்கை என்று கூட பார்க்காமல் சிறுமியின் 22 வயது சகோதரன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். நேற்று சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் 22 வயது சகோதரர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த கொள்முதல் உயர்த்த வேண்டும்...! மத்திய அரசு உத்தரவு...!

Thu Jul 13 , 2023
கடந்த மாதம் தக்காளியின் சில்லறை விலை அதிகபட்சமாக இருந்த முக்கிய பயன்பாட்டு மையங்களில் விநியோகிப்பதற்காக, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் மண்டிகளிலிருந்து அவற்றைக் கொள்முதல் செய்யுமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பிற்கும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிற்கும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை அளவில் டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் உள்ள நுகர்வோருக்கு சில்லறை விற்பனையகங்கள் வாயிலாக சலுகை விலையில் தக்காளி விநியோகிக்கப்படும். […]

You May Like