fbpx

காதலனுடன் சேர்ந்து பக்கா பிளான் போட்ட காதலி..!! குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி சம்பவம்..!!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இதுதொடர்பான விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையில், இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அவளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வாலிபரை திருமணம் செய்து வைக்கவும் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், வீட்டில் சப்பாத்தி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷம் கலந்துள்ளார். காதலனும் இளம்பெண்ணும் சேர்ந்து திட்டமிட்டுள்ள நிலையில், விஷத்தை அவளது காதலன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இது தெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் வழக்கம் போல் சப்பாத்தி சமைத்து சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த இளம்பெண்ணையும், அவளது காதலனையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : விவசாயிகளே இனி கவலை வேண்டாம்..!! நடைமுறைக்கு வரும் மத்திய அரசின் மாஸ் திட்டம்..!!

English Summary

The enraged teenager poisoned the wheat flour she used to cook chapatis at home.

Chella

Next Post

உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! கனமழை கொட்டித் தீர்க்கப் போகுது..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Wed Oct 9 , 2024
The Indian Meteorological Department has announced that a low pressure area has formed over the Arabian Sea today.

You May Like