பீகார் தலைநகர் பாட்னாவில் தேச விரோத செயல்களில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜார்க்கண்ட் காவல்துறையின் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான முகமது ஜலாலுதீன், என்பவரும் ஒருவர்.. மற்றொருவர் அதர் பர்வேஸ். இவர்கள் இருவரும் தற்காப்பு கலை என்ற போர்வையில் தீவிரவாத பயிற்சி அளித்து வந்ததாக பாட்னா போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ’மிஷன் 2047′ என்ற ரகசிய ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் 2047க்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது குறிவைக்க சதியும் இருந்தது.
பிரதமர் மோடியின் வருகைக்கு 15 நாட்களுக்கு முன்னதாக பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடியை குறிவைப்பதற்கான வழிகளை திட்டமிடுவதற்காக கூட்டங்களை நடத்தினர். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபரின் அலுவலகத்தில் பீகார் போலீசார் சோதனை நடத்தினர். இவர்கள் இருவரிடமும் பயிற்சி பெற கடந்த இரண்டு மாதங்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருவதாக போலீசார் தெரிவித்தனர். டிக்கெட் முன்பதிவு செய்யும் போதும், ஓட்டல்களில் தங்கும் போதும் பார்வையாளர்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருந்தனர்.
மேலும் “ காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் ஜூலை 6-7 தேதிகளில் தற்காப்பு கலை என்ற பெயரில் உள்ளூர் மக்களுக்கு வாள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்த கற்றுக் கொடுத்தார். இளைஞர்களை மத வன்முறைக்கு தூண்டினார். சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள லட்சக்கணக்கான ரூபாய் நன்கொடை பர்வேஸ் திரட்டினார். ‘இந்தியா விஷன் 2047’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட 8 பக்க நீண்ட ஆவணத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டது..” என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு பாட்னா காந்தி மைதானத்தில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஞ்சரின் சகோதரர் அதர் பர்வேஸ். பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்தில் காந்தி மைதானத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பல குற்றவாளிகளை விடுவிக்க அதர் பர்வேஸ் ஜாமீன் பெற முயன்றார். கைது செய்யப்பட்ட இருவரும், படிக்காத இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.