fbpx

’தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையை ஆளுநர் ஆதரிக்க வேண்டும்’..! – அமைச்சர் பொன்முடி

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் நலனை பாதிக்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கையே உள்ளது. ஆங்கிலம் மற்றும் மாநில மொழியுடன் இந்தி மொழியையும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு உருவாக்கியுள்ள புதிய கல்வி கொள்கையிலும் இதுவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி  | New education policy will never enter Tamil Nadu: Minister Ponmudy -  hindutamil.in

எனவே ஆளுநர், தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையை ஆதரிக்க வேண்டும். அவரது கருத்துக்கள் ஏதும் இருந்தாலும் சொல்ல வேண்டும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் நலனை பாதிக்கும். இருப்பினும் தமிழகத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசியல் அமைப்பு பற்றி தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

’பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பாஜக ஆட்சியில் அதிகரிப்பு’..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Thu Jul 14 , 2022
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக இந்தாண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட மேலும் 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில், இருப்பதையே […]

You May Like