ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நெல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காவல் ஆய்வாளர் வாசு ரகசிய தொடர்பில் இருப்பது சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்தது. ஏற்கனவே 2-வது திருமணம் செய்த கோபத்தில் இருந்தவருக்கு, கள்ளத்தொடர்பு சமாச்சாரமும் தெரிந்ததால் கொந்தளித்த அவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து அப்பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு இருவரையும் பிடித்து வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். பின்னர், அங்கிருந்த காவலர் வாசு மற்றும் அவரது மனைவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.