fbpx

மனைவியின் உடலை துண்டு தூண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் பதுக்கி வைத்திருந்த கணவன்..!! பகீர் சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலம் கிளாஸ் போர் மாவட்டத்தில் இருக்கும் உசிலாப்பூர் பகுதியில் வசிப்பவர் பவன் சிங் தாகூர். இவரது மனைவி சதி சாஹு. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சமீப காலமாக பவன் தாக்கூருக்கு மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பவன் சிங் தாகூர், தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி, வீட்டு மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தண்ணீர் தொட்டியை பார்த்தபோது, சாஹு சதியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி, அதில் போட்டு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மனைவியை கொடூரமாக கொன்ற கணவனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய பிரபல ரவுடி….! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!

Tue Mar 7 , 2023
கோயமுத்தூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி( 32) இவர் மீது கோயம்புத்தூர் மதுரை போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தனர் இன்றைய சூழ்நிலையில் தான் சென்ற மாதம் 12ஆம் தேதி சத்தியபாண்டி இளநீர் கடை அருகே தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டு உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு […]

You May Like