மனதில் பல கவலைகளோடு வாழ்ந்து மறைந்தவர் தான் நடிகை சுஜாதா. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர், தனது கணவரால் பல கொடுமைகளை சந்தித்தார். நடிகை சுஜாதாவின் கணவர், அவரை பெல்டால் அடித்து கொடுமைப்படுத்தினார் என்று நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
சினிமா தயாரிப்பாளரும் நடிகையுமான குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், தேசிய விருது கூட வாங்கியிருக்கிறார். இவர், சினிமா துறையினர் சம்பந்தமான சில விஷயங்களை வெளிப்படையாக தனது KPTV youtube யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அந்த வகையில், நடிகை சுஜாதாவின் கசப்பான வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.
அதில், ”பலர் சுஜாதாவை பற்றி பேசும் படி கேட்டுக்கொண்டதால், நான் அவரை பற்றி இந்த வீடியோவில் பேசுகிறேன். நானும் சிவகுமார் அவர்களும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான், பாலச்சந்தர் நடிகை சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுஜாதாவை பார்க்கும் போதே ரொம்ப மென்மையாகவும், அழகு பதுமையாகவும் இருந்தார்.
அவர்களுடையே கண், மான் கண்போல அவ்வளவு அழகாக இருக்கும். சுஜாதா சினிமாவில் நடித்த வரை அவருக்கு எந்த ஒரு கெட்ட பெயரும் வந்ததே கிடையாது. மக்கள் சுஜாதாவை தனது குடும்பத்தில் ஒரு பெண்ணாக பார்த்தனர். பல வெற்றிப்படங்களை கொடுத்து திறமையான நடிகை என பெயர் எடுத்தாலும், சுஜாதாவுக்கு நடிக்க பிடிக்கவில்லை.
திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவரது ஆசை. அப்போது ஜெயகர் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்கலாம் என்று சொன்ன அவரது கணவர், பின் இப்படி நடி, அப்படி நடி என்று பல கண்டிஷன் போட்டு சுஜாதாவை கொடுமைப்படுத்தினார்.
ஜெயகர் ஆண் ஆதிக்க மனம் கொண்டவர். கர்வம், தலைக்கனம் பிடித்தவர் போல நடந்து கொள்வார் அவரை எப்படி சுஜாதா காதலித்தார்கள் என்பது பலருக்கும் புரியாத ஒன்றாக இருந்தது. சுஜாதா தனது கணவருடன் எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் ஒரு வீட்டின் கீழ் பகுதியில் ஊறுகாய் கம்பெனி நடத்திக் கொண்டு மேல் வீட்டில் குடியிருந்தனர். ஒரு நாள் சுஜாதாவை அவரது கணவர் பெல்டால் அடிக்கும் சத்தமும், சுஜாதா வலி தாங்க முடியாமல் அழும் சத்தமும் எங்களுக்கு கேட்டது.
நானும் அம்மாவும் ஓடிச்சென்று தடுத்தோம். அப்போதும் சுஜாதா எதையும் பேசாமல் அழுதுக்கொண்டே இருந்தார். அந்த காட்சியை என்னால் இன்னும் மறக்கவே முடியாது. அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த வீட்டை விட்டு சுஜாதா காலி செய்து வேறு எங்கோ சென்றுவிட்டார்கள். எங்கு போனார்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. அவர் இறந்த செய்திக்கூட யாருக்கும் தெரியவில்லை. விஷயம் தெரிந்த ஒன்றிரண்டு நடிகர்கள் மட்டும் தான் சுஜாதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்கள்” என குட்டி பத்மினி தனது வீடியோவில் கண்கலங்கி பேசியிருக்கிறார்.
Read More : காதலன் நடத்தையில் சந்தேகம்..!! திருமணத்திற்கு ‘No’ சொன்ன காதலி..!! கழுத்தை அறுத்த அதிர்ச்சி சம்பவம்..!!