பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளான். இதற்கிடையே, தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சக மாணவன் அரிவாளால் வெட்டியதில் மாணவன் மற்றும் ஆசிரியர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், படுகாயமடைந்த மாணவன் மற்றும் ஆசிரியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், மாணவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.