fbpx

அமெரிக்க துணை அதிபராகும் இந்திய மருமகன்!. யார் இந்த ஜே.டி.வான்ஸ்!.

JT Vance: அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகி இருக்கும் நிலையில் துணை அதிபராக ஜேடி வான்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். எனவே அமெரிக்க துணை அதிபரை அனைவரும் இந்தியாவின் மருமகன் என குறிப்பிடுகின்றனர்.

குடியரசு கட்சி சார்பாக மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் டிரம்ப். இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் பதவியேற்க இருக்கிறார். தனது வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாடினார். அப்போது அவரது மனைவி மற்றும் தேர்தலில் அவருக்காக செயல்பட்டவர்கள் என அனைவரும் மேடையில் இருந்தனர். அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் துணை அதிபரையும் அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். 38 வயதான ஜே டி வான்ஸ் தான் அமெரிக்க துணை அதிபராக இருக்க போகிறார். ஜே டி வான்ஸுக்கும் இந்தியாவுக்கு ஒரு நெருங்கிய பந்தம் இருக்கிறது. இவரது மனையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி ஆவார்.

உஷா இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியவர் என சொல்லப்படுகிறது. உஷா சிலுக்குரியின் பெற்றோர் 1970களில் அமெரிக்காவின் சான் டியாகோ நகருக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஜே டி வான்ஸும், உஷாவும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர்.

Readmore: Pension | எல்லாம் திருமணம் வரைக்கும் தான்..!! திருமணத்திற்கு பிறகு உங்கள் மகளுக்கு இதெல்லாம் கிடைக்காது..!!

English Summary

The Indian son-in-law who is the US Vice President! Who is this JT Vance!.

Kokila

Next Post

காது கேளாத கொசுக்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது..!! - டெங்கு பரவலை தடுக்க விஞ்ஞானிகள் புதிய ஆய்வு

Thu Nov 7 , 2024
How To Stop Dengue? Make Mosquitoes Deaf So They Don't Have Sex, Say Scientists

You May Like