fbpx

அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை அள்ளிச்சென்ற விவகாரம்..! ஓபிஎஸ் மீது போலீசில் புகார்..!

அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர். இதையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவியதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுக: கலவர பூமியான கட்சி அலுவலகம்... மண்டை உடைப்பு; பேருந்து, கார் சேதம்  | புகைப்படத் தொகுப்பு | A photo album on admk party office fight

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்துள்ள புகாரில், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முக்கிய ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் வந்த வாகனத்தில் கொண்டு சென்று விட்டதாகவும், அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிமுக அலுவகத்திற்கு சீல்.. நீதிமன்றத்தில் முறையிட்ட இபிஎஸ்...

Tue Jul 12 , 2022
அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்த நிலையில் நேற்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் ஏற்பட்டது.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதால் பதட்டம் நிலவியது.. […]

You May Like