தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்திற்குக் குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்குத் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் :
* மருத்துவ அலுவலர் 2,
* செவிலியர் 2,
* பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 2
மருத்துவ அலுவலர் பணிக்கு தகுதி : மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் MBBS முடித்தவராகவும், TNMSEஇல் பதிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும். மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மருத்துவ அலுவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும்.
செவிலியர் பணி : செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் DGNM (Diploma in General Nursing and Midwifery) முடித்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். செவிலியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.14,000 சம்பளமாக வழங்கப்படும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.6,000 சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் தகுதிச் சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயல் அலுவலர், முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் 628206, என்ற முகவரிக்கு 05.10.2024 அன்று மாலை 5.00க்குள் கிடைத்திடும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
Read more ; பிரபல பாலிவுட் நடிகர் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? வினோத் மெஹ்ரானின் சர்ச்சைக்குரிய காதல் வாழ்க்கை..