உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள உணவகத்தில் முன்னாள் காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயங்களுடன் அந்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா. திருமணமாகி குழந்தை உள்ளது. தற்போது விவாகரத்து பெற்று குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்ரு அலிகார் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட்டுக்கு சென்றுள்ளார். அடுத்த 5வது நிமிடத்தில் ஆண் ஒருவர் அங்கு வந்தார். அவரது பெயர் விவேக்.
இருவரும் ஒரு உணவகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தனது பையில் இருந்து ஆசிட் பாட்டிலை எடுத்த பெண், எதிரில் அமர்ந்திருந்த அந்த நபர் மீது வீசியுள்ளார். இதனால் அந்த நபருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பெண்ணுக்கும் அமிலம் வீசியதில் கை பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும், உணவக ஊழியர் ஒருவரும் இந்த சம்பவத்தால் காயமடைந்தார். தாக்குதலையடுத்து காதலன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காயமடைந்த பெண் மற்றும் உணவக ஊழியர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், ‛‛ரெஸ்டாரண்ட்டில் நடந்த ஆசீட் ஊற்றிய சம்பவத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு பரீட்சயமானவர்கள். அவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த பிரச்சனையில் ஆசீட் வீச்சு நடந்துள்ளது. சிகிச்சையில் உள்ள நபர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு, 12 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தூள்ளது” என்றார்.
Read more ; அலர்ட்… இந்த App உங்கள் மொபைலில் இருந்தால் மொத்த பணத்திற்கும் ஆப்பு..!! உடனே டெலிட் பண்ணிடுங்க..