fbpx

வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்புறாங்க.. ஆனால் இவர்கள்..!! – சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில், கல்லூரிக்கூட செல்லாமல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த மாணவர் சுந்தர், கடந்த அக்.4-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்திய மாணவர் சங்கம் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு இடையேயான ஒற்றுமை குறித்தான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர். காவல்துறை தரப்பில், வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் பதியபட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அதிகப்படியான மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டு வேலை செய்து படிக்க அனுப்புகின்றனர். ஆனால் கல்லூரி கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. வழக்கில் உயர்கல்வித்துறைச் செயலரும் இணைக்கப்படுகிறார். மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக காவல் துறை மற்றும் ரயில்வே போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Read more ; பகீர்.. இறந்துவிட்டதாக சர்டிபிகேட் வழங்கிய மருத்துவர்கள்.. எரியூட்டும்போது உயிருடன் எழுந்து வந்த இளைஞன்..!! – 3 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

English Summary

The Madras High Court has expressed pain that it is painful for students to engage in underground activities without going to college when their parents send them to study after doing housework.

Next Post

"தாத்தா, என்ன இங்க தொடாதீங்க" கெஞ்சிய சிறுமி; கோவிலில் ஆள் இல்லாத போது, 70 வயது பூசாரி செய்த காரியம்..

Fri Nov 22 , 2024
70-years-old-man-sexually-abused-school-girl

You May Like