மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ், அகவிலைப் படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது.. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மேலும் 3% உயர்த்தப்பட்டது, 34% ஆக மாறியது..
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 4 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இந்த உயர்வு ஜூலை மாத சம்பளத்திலேயே கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 4 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது..
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த உயர்வுக்குப் பிறகு, டிஏ 38 சதவீதமாக இருக்கும். ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், ஆண்டு டிஏ உயர்வு ரூ.8640 ஆக இருக்கும். அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..