fbpx

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,820-க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது..ஒரு கிராம் வெள்ளி 30 காசு உயர்ந்து ரூ.63.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

காவல்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடு..! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு..!

Tue Aug 2 , 2022
காவல்துறையில் முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ படை இணை இயக்குனர் மேஜர் வி.எஸ்.ஜெயக்குமார் தமிழக அரசுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கு காவல்துறையில் இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ”முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு மட்டும் 5சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும், முன்னாள் ராணுவ […]
காவல்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடு..! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு..!

You May Like